தனுஷ், சிவகார்த்திகேயன் மீண்டும் மோதலா?

SOCIALIZE IT ⇨
'காக்கி சட்டை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வராதது மற்றும் சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் வெளியேறியது உள்ளிட்ட விஷயங்களில் தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதை உறுதிபடுத்த முடிகிறது.
danush-siva

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, இமான் அண்ணாச்சி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'காக்கி சட்டை'.

தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

தனுஷ்தான் தயாரிப்பாளர் என்றாலும், 'காக்கி சட்டை' பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன், "முதலில் தனுஷ் ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கமளித்து விடுகிறேன்.

உங்கள் மீது முழுநம்பிக்கை இருக்கிறது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். படம் ஆரம்பித்த தருணத்தில் இருந்து இப்போது வரை நாங்கள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்கிறார்" என்று கூறினார்.

'காக்கி சட்டை' பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

சிவகார்த்திகேயன் அரங்குக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் தனுஷ் அரங்கில் இருந்து வெளியேறி விட்டார். இறுதியாக பரிசு கொடுக்கும் போது மட்டும் மேடையேறி சிவகார்த்திகேயனுடன் பரிசுகளை வழங்கிவிட்டு வெளியேறிவிட்டார்.

தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல் இல்லை என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.

மேலும், சமீபத்தில் தனுஷ் பேட்டி எடுக்கச் சென்ற நிருபர் சிவகார்த்திகேயன் தொடர்பான கேள்விகள் கேட்க, அதற்கு தனுஷும் விரிவான பதில்கள் அளித்திருக்கிறார்.

அந்த பேட்டி முடிந்து வீட்டிற்கு திரும்புவதற்குள் "சிவகார்த்திகேயன் தொடர்பான கேள்விகளும், பதில்களும் எழுத வேண்டாம். மற்றதை எழுதிக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

தனுஷின் இந்தச் செயலுக்கு காரணம் என்ன என்பதை அவரே முன்வந்து விளக்கமளிக்காத வரை இந்த சர்ச்சை ஒயபோவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

0 comments:

Post a Comment