மனிதாபிமான அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு!

SOCIALIZE IT ⇨
ரஜினியின் ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரூ. 33 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு அளிக்க முன் வந்தார்.
linga nasta eedu

இதையடுத்து விநியோகஸ்தர்களிடம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.25 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது.

ஆனால் லிங்கா பட விநியோகஸ்தர் தரப்பில் நஷ்டஈடு தொகையை மேலும் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து இன்று விநியோகஸ்தர்களுடன் சரத்குமாரும் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர் ராக்லைன் வெங்கடேசும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பது என்று முடிவாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரத்குமார் கூறும்போது, மனிதாபிமான அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு குறிப்பிட்ட தொகையை நஷ்டஈடாக வழங்க ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர் சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என நம்புகிறேன் என்றார். எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களிடம் இதுபோல் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் கூறும்போது, இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.

பெங்களூர் கோர்ட்டில் தயாரிப்பாளர் பெற்றுள்ள தடை உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment