மறுபடி மறுபடியும் பார்க்கத் தூண்டும் "இறுதி சுற்று"

அதென்னாவோ தெரியல... இந்த படத்தைப் பார்த்து முடித்ததும் மறுப்டியும் ஒரு தடவை பார்க்கத் தோணுது. அந்தளவுக்கு படத்தை நச்சுன்னு எடுத்திருக்காங்க..!

மாதவன் நடிப்பாகட்டும்...மற்ற காட்சி அமைப்பாகட்டும்...எல்லாமே அருமை....
iruthi suttru tamil movie review
இறுதி சுற்று - சினிமா விமர்சனம்

குறிப்பா கிளைமேக்ஸ் தூள்....

பெண் இயக்குநர்னாலே நல்லா எடுத்திருக்க மாட்டாங்கன்னு நினைச்சதெல்லாம் படம் பார்க்க பார்க்க அப்படியே எதிர்மறையா போச்சுங்க....!

புதுமுக நடிகை - பாக்சர் , மாதவன், நாசர், ராதாரவி ன்னு நடிகர் -நடிகைகள் எல்லாமே அவ்வளவு அருமையா நடிச்சிருக்காங்க...!

மத்த விமர்சனங்கள்ல எல்லாம் குத்து சண்டை, அதுக்குள்ள நடக்கும் கோல்மால்கள்ன்னு படத்தை அப்படியே சொல்லியிருந்தாங்க...

நமக்கு அப்படியெல்லாம் எழுத மனசு வரல... என்ன ரசிச்சமோ அதை மட்டுமே எழுதியிருக்கேன்..

இறுதி சுற்றி - உறுதி சுற்று

ஜில் ஜங் ஜக் படத்தில் இடம்பெற்ற "ஷூட் த கிழி" ஆபாச பாடல்

வெள்ள நாயகன் சித்தார்த் தயாரித்துள்ள படம் "ஜில் ஜங் ஜக்". இந்த படத்தில் இடம்பெறும் "ஷூட் த கிழி" பாடல் ஆபாச பாடல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதனால் இந்த படத்திற்கு சென்சார் "யு" சான்றிதழல் கொடுக்காமல், "யுஏ" சான்றிதழல் கொடுத்துள்ளாக தெரிவித்துள்ளது.
jil jang juck sidharth
jil jang juck sidharth

இது குறித்து ட்விட்டரில் சித்தார்த், "ரொம்ப சந்தோஷம், சுத்தமான, அமைதியான, தெய்வீகமான யுஏ சான்றிதழ் கிடைத்தற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

யு சான்றிதழ் கிடைக்கும் என நினைத்த படக்குழு, யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கதாநாயகிகளே இந்த படத்தில் இல்லை.. மூன்று இளைஞர்களை சுற்றி நடக்கும் கதை.. ஆனால் இந்த படத்திற்கு யு.ஏ. சான்றிதழ்.

எல்லாம் சிவன் மயம்...!!


விஜய்க்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிறகு டாப் லெவலுக்கு போய்விட்டார் கீர்த்தி சுரேஷ்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்ப கால படங்கள் படு தோல்வியை தந்திருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம்பிக்கையோடு நடிக்கத் தொடங்கினார். அந்த நம்பிக்கை சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிறகு ஜெயித்துவிட்டது.

keerthi suresh rajini murugan

தற்பொழுது தனுசுடன் "மிரட்டு" படத்தில் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இவரது சம்பளம் 75 லட்சமாக இந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னே... டாப் லெவல் நடிகருடன் ஜோடி சேர்ந்தால், சம்பளமும் டாப் லெவலில் உயராமல் இருக்குமா என்ன?

நீங்க கலக்குங்கு கீர்த்தி..!

தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி போட வரும் எதிர்கால சூப்பர் ஸ்டார்...!

தமிழ் சினிமாவில் இந்த தலைமுறை சூப்பர் ஸ்டார் யார் என்பது இன்னும் கேள்குறியாகவே இருக்கிறது.

அஜீத், விஜய், சூர்யா, தனுஷ் வரிசையில் புதியதாக வந்த நடிகர்களும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டி  செல்லும் ஆசையில் சினிமாவில் ஜொலிக்கின்றனர்.

அஜீத்தா, விஜய்யா என்ற கேள்வி போய்... தற்பொழுது பிரபலமாகி நடித்து வரும் சிவகார்த்திகேயனையும் அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரேன்ஜில் கொண்டாடுகிறார்கள்.
nadigar sivvkarthikeyan

அப்படி கொண்டாடுவதற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் தொடர்ச்சியான வெற்றிதான்.

அவர் ஒவ்வொரு படத்திலும் காட்டும் ஈடுபாடு.. அதை மக்களின் ரசனைக்கு ஏற்ப கொடுக்கும் விதம் ஆகியவற்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒரு சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர் முதல், நடிகர்கள், கலைஞர்கள் வரை அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொண்ட அவரது தனிப்பட்ட குணமும் இந்த வெற்றிக்கு மூல காரணமாக அமைந்துள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் பரபரப்பாக பிரபலமாகி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் "தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி போட வரும் எதிர்கால சூப்பர் ஸ்டார்" என்று நம்புகின்றனர்.


அண்ணனோடு மோத முடியாது - கார்த்தி பேட்டி!

“இயக்குநர் முத்தையாவோட வாழ்க்கையில் அவருடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் நடந்த ஈகோ யுத்தத்தைத்தான் கதையாக வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் கூட நடந்திருக்கின்றன” என 'கொம்பன்' படம் எப்படித் தனக்கு நெருக்கமானது என்று உற்சாகமாகத் தொடங்கினார் கார்த்தி

கொம்பன் படத்தின் கதை என்ன?

ராமநாதபுரம் ஏரியா ஆப்பநாடு பகுதியில் ஆடு வியாபாரம் செய்கிறவன்தான் கொம்பையா பாண்டியன். தண்ணி அடிக்காத, கெட்ட பழக்கம் இல்லாத நல்லவன். இந்த மாதிரியான கதாபாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணியது இல்லை. மாமனார் - மருமகன் ஈகோதான் கதைக்கரு. ராஜ்கிரண்தான் நடிக்கணும்னு பல ஆண்டுகளாக இந்தக் கதையை வைத்திருந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

திருமணமான புதிதில் புது மாப்பிள்ளைகள் மாமனாரை வம்புக்கு இழுப்பார்கள். அவர் வீட்டில் இருக்கும்போதே, “உங்கப்பா சாப்பிட்டாரா”னு கிண்டல் பண்ணுவாங்க. கல்யாணம் ஆன உடனே மாமனார் - மருமகன் இருவருக்குள் நடக்கும் காமெடி, உரசல் எல்லாம் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது.

கல்யாணத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பல கதைகள் வந்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு நடப்பது பற்றிய காட்சிகள் அமைந்த படங்கள் குறைவு. அதிலும் மாமனார் - மருமகன் உறவில் சமீபத்தில் எந்தப் படமும் வந்ததில்லை. அந்த வகையில் ‘கொம்பன்' அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

படத்தின் விளம்பரங்களில் ‘பருத்தி வீரன்’ படத்தின் சாயல் தெரிகிறதே..

‘பருத்தி வீரன்' படத்தில் இருந்து வேற மாதிரித் தெரிய வேண்டும் என்று மீசை எல்லாம் வைத்துப் போய்ப் பார்த்தால் எல்லாருமே அந்த மாவட்டத்தில் இதே மாதிரிதான் மீசை வைத்திருந்தார்கள். அந்த ஊர்க்காரனாக மாற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாமே பண்ணியிருக்கிறேன்.

‘பருத்தி வீரன்' படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு அப்படத்தின் ஞாபகம் வராமல்தான் நடித்திருக்கிறேன். ‘கொம்பன்' ஆரம்பிக்கும்போது ‘பருத்தி வீரன்' ஞாபகம் வந்தாலும், முடியும்போது கண்டிப்பாக இது வேறு படம் என்று ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

தொடர்ச்சியாகக் கிராமத்து வேடங்களே வருகிறது என்று லட்சுமி மேனன் சலித்துக்கொண்டிருக்கிறார் கவனித்தீர்களா?

திரையுலகை விட்டு விலக இருக்கிறார் என்று செய்திகள்கூட வந்தது. பிறகுதான் அந்தச் செய்தி தவறு என்று கேள்விப்பட்டேன். லட்சுமி மேனனுக்கு உண்மையில் நடிப்பைவிடப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஒரே மாதிரியான கிராமத்து வேடங்களே வருகிறதே என்ற எண்ணம் அவங்ககிட்ட இருக்கிறது.

நகரத்தில் வளர்ந்த பெண், மார்டனான பெண். ஆனால் கிராமத்து வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவதால் அனைவருமே அதே மாதிரியான வேடத்திற்கு அவரைக் கூப்பிடுகிறார்கள். ஒரு நடிகையாக அவங்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். மற்றபடி சினிமா மேல கோபம் எல்லாம் இல்லை. திறமையான நடிகை.

அண்ணனும், தம்பியும் வெவ்வேறு கதைக்களங்களில் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?

அமையுறதுதான். நல்ல கதைகள், நல்ல இயக்குநர்கள் நம்மைத் தேடி வர வேண்டும். நல்லவேளை எனக்கு அவரை மாதிரிப் படங்கள் அமையவில்லை. அவர்கூட யார் போட்டி போடுவது? இருவருடைய படங்களும் வேறு மாதிரி அமைவது சந்தோஷமாக இருக்கிறது.

ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் மாதிரி உங்களுக்குப் போட்டி யார்?

ஏன் இப்படிச் சிக்கலில் மாட்ட வைக்க நினைக்கிறீர்கள். என்னுடைய முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும்தான் போட்டி. என் படத்தைப் பார்க்க வருபவர்கள் என்னிடம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லையே!

எனது முந்தைய படத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பொறுத்துதான் அடுத்த படத்திற்கு மக்கள் வருகிறார்கள். முந்தைய படத்தைவிட இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது, எவ்வளவு தரமாக இருக்கிறது இதைதான் பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்குமே அவருடைய முந்தைய படத்தோடுதான் போட்டி என்பது என் கருத்து.

வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஒவ்வொரு படத்துக்கும் உழைக்கிறேன். நிறைய உழைத்த படங்கள் சரியாகப் போகாதபோது ரொம்ப வருத்தப்படுவேன். ஆனால், அப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த படத்தைப் பாதிக்கும்.

ஒரு படம் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. ஆனால், எல்லாப் பொறுப்பும் என்னைத்தான் பாதிக்கும். தோல்வி வரும்போது எல்லாம் அடுத்த படம் ஜெயிக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு எழுந்துவிடுவேன்.

இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கணும் என்று நீங்கள் நினைத்த படம் எது?

‘மெட்ராஸ்' அப்படி நான் பண்ணிய படம்தான். அந்தப் படம் எனக்காக உருவாக்கப்பட்டதில்லை. கதையைப் படித்தபோது ரொம்ப பிடித்தது. என்னை அப்படத்துக்குப் பொருத்திக் கொண்டேன். மற்றபடி நான் பார்க்கும் படங்கள் நல்லாயிருக்கும்போது, நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது இல்லை. படம் நல்லாயிருக்கும் பட்சத்தில் படக்குழுவினருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டிவிடுவேன். அது தான் என்னுடைய பாணி.

உங்கள் படத்தின் கதை, காட்சிகள் பற்றி உங்கள் மனைவியிடம் பேசுவீர்களா?

நீங்க வேற. அப்படி எல்லாம் பேச ஆரம்பித்தால் வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டிற்குப் போனால் சினிமாவை மறந்துவிடுவேன். படத்தைப் பற்றி பேசினாலே, “24 மணி நேரமும் படத்தைப் பற்றி சிந்திக்கிறீங்களே” என்று மனைவி கேட்பார். அதனால் என் படத்தைப் பற்றி மனைவியோடு விவாதிப்பதில்லை.
simbu-hansika
ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்ததாக சிம்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

'வாலு' படத்தில் நடிக்க ஆரம்பித்த போது சிம்பு - ஹன்சிகா இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், நீண்ட நாட்கள் அக்காதல் நீடிக்கவில்லை. சிம்பு தனது காதல் பிரிவு குறித்து பேட்டிகளில் வெளிப்படுத்தி வந்தாலும், ஹன்சிகா இது வரை தனது காதல் குறித்து எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

காதல் பிரிவிற்கு பிறகும் கூட 'வாலு' படத்துக்காக ஒரு பாடலில் இணைந்து நடித்தார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'வாலு' சென்சார் முடிந்து, மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஹன்சிகா உடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பாலிவுட் லைஃப் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்பு. "நாங்கள் இருவரும் உள்ளன்போடு இருந்தோம். வாலு படத்திற்காக சென்ற வருடம் பாங்காக்கிற்கு படப்பிடிப்பிற்குக் கூட சென்றோம்.

பிரிவுக்கு காரணம் நாங்கள் இருவருமே இல்லை; எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இல்லை. பிரிவுக்கு பல்வேறு மற்ற காரணங்கள் உள்ளன. இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், பிரிவால் வருத்தப்பட்டேன். எனினும், நிலைமையைப் புரிந்து கொண்டேன், அதைக் கையாள வேண்டிய சூழலின்போது, நான் அதை அப்போது செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்."என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்ததாக சிம்பு உருக்கம்

ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்ததாக சிம்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

'வாலு' படத்தில் நடிக்க ஆரம்பித்த போது சிம்பு - ஹன்சிகா இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், நீண்ட நாட்கள் அக்காதல் நீடிக்கவில்லை. சிம்பு தனது காதல் பிரிவு குறித்து பேட்டிகளில் வெளிப்படுத்தி வந்தாலும், ஹன்சிகா இது வரை தனது காதல் குறித்து எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

காதல் பிரிவிற்கு பிறகும் கூட 'வாலு' படத்துக்காக ஒரு பாடலில் இணைந்து நடித்தார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'வாலு' சென்சார் முடிந்து, மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஹன்சிகா உடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பாலிவுட் லைஃப் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்பு. "நாங்கள் இருவரும் உள்ளன்போடு இருந்தோம். வாலு படத்திற்காக சென்ற வருடம் பாங்காக்கிற்கு படப்பிடிப்பிற்குக் கூட சென்றோம்.

பிரிவுக்கு காரணம் நாங்கள் இருவருமே இல்லை; எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இல்லை. பிரிவுக்கு பல்வேறு மற்ற காரணங்கள் உள்ளன. இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், பிரிவால் வருத்தப்பட்டேன்.

எனினும், நிலைமையைப் புரிந்து கொண்டேன், அதைக் கையாள வேண்டிய சூழலின்போது, நான் அதை அப்போது செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்."என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

ஜூலை 17ம் தேதி வெளியாகிறது 'ரஜினி முருகன்'

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'ரஜினி முருகன்' திரைப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

'காக்கி சட்டை' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கி வரும் 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
sivakarthikeyan

கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்திருக்க வேண்டியது. ஆனால், நாயகி கீர்த்தி சுரேஷிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'ரஜினி முருகன்' ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படம் எப்போது வெளியாகும் போன்றவை உள்ளிட்ட விவரங்களை அறிவித்திருக்கிறது.

"ஏப்ரல் 25ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக், ஜூன் 7ம் தேதி இசை வெளியீடு, ஜூலை 17ம் தேதி படம் வெளியாகும்" என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜூலை 17ம் தேதி ரம்ஜான் விடுமுறைகளை கணக்கில் கொண்டு அந்த தேதியை முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் அந்த ரகசியம்!

actress anushka
என்னுடைய வெற்றிக்கு முழுமுதற் காரணம், எனது சொந்த முயற்சி தான் என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.


பாலிவுட் திரையுலகின் பேரழகியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. ஷாரூக் கான் உடன் ரப் னே பனா தி ஜோடி படத்தின் மூலம், அனுஷ்கா சர்மா திரையுலகில் அறிமுகமானார். இன்று, அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.

நடிப்பு என்பதை தாண்டி, இவ்வார இறுதியில் வெளியாக உள்ள என்.ஹெச் 10 படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அனுஷ்கா சர்மா மாறியுள்ளார். என் ஹெச் 10 படத்தில் நடிப்பு அனுபவம் மற்றும் தயாரிப்பாளர் குறித்த அனுபவங்கள் குறித்து அனுஷ்கா சர்மா, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

தயாரி்ப்பாளர் ஆனதில் மகிழ்ச்சியா?

நிச்சயமாக.... இப்போது நான் வெறும் நடிகை மட்டுமல்ல, ஒரு படத்தின் தயாரி்ப்பாளரும் கூட. நான் எந்த நிலைக்கு சென்றாலும், எனது கடின உழைப்பை என்றைக்கும் கைவிட மாட்டேன். எனது முதல் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் என்ஹெச் 10, வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. அந்த நாளுக்காக, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். கடின உழைப்பின் பலனாக, ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.

ஏன் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டீர்கள்?

நான் எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். நான் நடித்துள்ள படங்களை நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்கு தெரியும்...படத்தில் சிறந்த கதை மட்டும் இருந்தால், நடிகர், நடிகையர் யார் நடித்தாலும் படம் வெற்றிபெறும். நான் கதைக்கு மட்டுமே எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

என்ஹெச் 10 படத்தில் சிறந்த கதை உள்ளது. இந்த காரணத்தினாலேயே, இந்த படத்தை, நானே தயாரிக்க திட்டமிட்டேன். இந்த படத்தில் என்னால் முடிந்த அளவிற்கு, நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன்.

என்ஹெச் 10 படத்தின் கதை குறித்து?

என்ஹெச் 10 , ஒரு திரில்லர் படம். சாலை பயணத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மீரா மற்றும் அர்ஜூன் என இரண்டு கேரக்டர்கள். மீரா கேரக்டரில் நானும், அர்ஜூன் கேரக்டரில், நீல் பூபாளமும் நடித்துள்ளோம். புதுமண தம்பதிகளான மீராவும், அர்ஜூனும், வார விடுமுறையை கழிப்பதற்காக, மலைவாசஸ்தலத்திற்கு, தங்களது காரில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அப்போது அவர்களது கார், தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு சம்பவத்தை அவர்கள் எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட துவங்குகிறது. இதுதான் படத்தின் கதை ஆகும்.

என்.ஹெச்.10 பெரிய பட்ஜெட் படமா?

இல்லை..இல்லை...என்.ஹெச.10 படம் சிறிய பட்ஜெட் படம் தான். இந்த படத்தில், நான் சம்பளம் வாங்காமல் மற்றும் பெறாமல் நடித்துள்ளேன். இந்த படத்தை நான் துவங்குவதற்கு முன்பே, படத்தின் செலவு மற்றும் கிடைக்கவுள்ள லாபம் குறித்து எதுவும் சிந்திக்கவில்லை.

படத்தில் சமூக கருத்து ஏதேனும் உள்ளதா?

நான் நடித்து சமீபத்தில் வெளியான பீகே படம் போன்று, இதில் சமூக கருத்துகள் ஏதும் இல்லை. ஆனால், இதில், சமூக கருத்து என்று சொல்வதைவிட, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது தான், உங்களது மனோதிடம் மற்றும் வலிமை உங்களுக்கு தெரியவரும் என்பது தான்.... இந்த படத்தை பார்த்தபிறகு, அனைவரும் இதுகுறித்து விவாதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தயாரி்ப்பாளர் என்ற விதத்தில் உங்களது அனுபவங்கள்?

நடிகை என்ற முறையில் சொல்கிறேன். நடிப்பு என்பது எளிதானது தான், ஆனால், தயாரிப்பாளர் என்பது மிகவும் கஷ்டமான செயல் ஆகும். நடிகர் என்றால், சூட்டிங் நடக்கும்போது மட்டும் ஸ்பாட்டில் இருந்தால் போதும். ஆனால், தயாரிப்பாளரின் ரோல் அப்படி அல்ல.

படம் துவங்கும் தினத்தில் இருந்து, படம் வெளியாகும் வரை, அவர் படம் தொடர்பான வேலைகளில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும். படத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு, தயாரிப்பாளரே, முக்கியமானவர் ஆவார். தயாரிப்பாளர், பல்வேறு பட்ட மனிதர்களை சந்திப்பதோடு மட்டுமல்லாது, பல முக்கிய முடிவுகளையும் அவர்தான் எடுக்கவேண்டும். அதனால்தான் சொல்கிறேன், தயாரிப்பாளர் என்பது கஷ்டமான பணி தான்....

உங்களது இன்ஸ்பிரேசன் ஆதித்யா சோப்ராவா?

ஆமாம், அது உண்மைதான். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா தான், நான் தயாரிப்பாளராக மாற இன்ஸ்பிரேசனாக இருந்தவர். ஆதித்யா சோப்ரா சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த மனிதர். அவரின் ஆதரவு எனக்கு என்றைக்கும் இருந்தது. என்னுடைய படத்தின் டிரைலரை பார்த்தவுடனே, அவர் அது தன்னுடைய படம் போல் உள்ளது என்று சொன்னது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அவருடன் இணைந்து படம் பண்ண விரும்புகிறேன்.

உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?

ரப் னே பனா டி ஜோடி படத்தில் நடிக்க துவங்கி, தற்போது இந்த துறையில் 6 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டேன். எனது நடிப்பிற்கு, ரசிகர்கள் மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே எனது நடிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.

நடிப்பிற்காக, நான் யாரையும் பாலோ பண்ணுவதில்லை. எனக்கு தெரிந்த மற்றும் என்னால் முடிந்த கதாபாத்திரங்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதையே, எனது வெற்றிக்கு காரணமாக நான் நினைப்பதாக அனுஷ்கா சர்மா கூறினார்.

நடிகை அவதாரம் எடுத்த காஸ்ட்யூம் டிசைனர்!

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் திரைக்கு சமீபத்தில் வந்துள்ள தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக நியமி்க்கப்பட்ட சுந்தரி
திவ்யா, அப்படத்தின் கதாநாயகிகளுள் ஒன்றான ஐஸ்வர்யா தத்தாவின் தோழியாக நடித்ததன் மூலம், நடிகை அவதாரம் எடுத்துள்ளார்.

சுந்தரி திவ்யா, இதற்குமுன், பிரபாகரன் இயக்கத்தில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்திலும், சக்திசிவன் இயக்கத்திலான சவாலே சமாளி, ஸ்டீவன்சன் இயக்கத்தில் அட்டு படத்தில், சுந்தரி திவ்யா, காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார்.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில், சுந்தரி திவ்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. சுந்தரி திவ்யா, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்.எல்.ஏ. அருண்பாண்டியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் படத்தில் ஆரோ சவுண்ட் சிஸ்டம் கொண்டு வரும் கமல்!

விஸ்வரூபம் படத்தில் ஆரோ சவுண்ட் சிஸ்டத்தை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் கமல். அதேபோல், தியேட்டரில் படங்கள்
வெளியாகும் அதே நாளில் வீடுகளுக்கும் டிவி மூலம் வெளியிட வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவரும் அவரே.

இப்படி எந்த புதிய விசயமாக இருந்தாலும் அதில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கமல், நேற்று வெளியிடட உத்தமவில்லன் ஆடியோ மற்றும் ட்ரெய்லரையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டார். அதாவது, படத்தின் ட்ரெய்லரை தனது செல்போன் மூலமே உலகமெங்கும் வெளியிட்டவர்.

பின்னர் ஆடியோவை தான் வெளியிட, மும்பையில் இருந்த தனது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை பெற்றுக்கொள்ள வைத்தார். இவர் இங்கிருந்து டெக்னாலஜியை பயன்படுத்தி அவருக்கு அனுப்ப, அதை அங்கிருந்தபடியே ஸ்ருதியை பெற்றுக்கொள்ள வைத்தார்.

அப்போது ஸ்ருதியின் முகம் இங்குள்ள ஸ்கிரினில் தெரிந்தது. ஆக, சம்பந்தப்பட்ட விழாவில் இல்லாத ஒருவரை வைத்தே முதன்முறையாக புதுமையான முறையில் ஆடியோவை வெளியிடும் இந்த முறையையும் இப்போது கமல்தான் முதன்முதலாக தொடங்கி வைத்திருக்கிறார்.

அப்பாடக்கர் சினிமா கதை விமர்சனம்

ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடிக்கும் படம் அப்பாடக்கர், சுராஜ் இயக்குகிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதன் இறுதிகட்ட
படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்து வருகிறது. அப்பாடக்கர் படத்தின் கதை இதுதான்...

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் சுற்றித் திரிகிறவர் ஜெயம்ரவி, அவரது நண்பர் சூரி. எந்த பிரச்னையிலும் இருந்து ஈசியாக தப்பித்து வருகிறவர்களை "அவன் பெரிய அப்பாடக்கருப்பா" என்பார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஜெயம்ரவி. உள்ளூர் பெண் அஞ்சலியை ஜாலிக்காக காதலிப்பார். அதாவது டைம் பாசுக்கு.

ஆனால் அஞ்சலியோ உண்மையாக தீவிரமாக காதலிப்பார். ரவியின் ஜாலியான காதலுக்கும், அஞ்சலியின் தீவிரமான காதலுக்கு இடையில் கிடந்து அல்லாடுவார் சூரி. அஞ்சலி துடுக்குத்தனமான வாயாடி பொண்ணு. நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார். ஒரு கட்டத்தில் அஞ்சலி தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி ரவியை மிரட்ட, தப்பித்து சென்னைக்கு வருகிறார் ஜெயம்ரவி.

சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு த்ரிஷா மீது நிஜமான காதல் வருகிறது. த்ரிஷாவுக்கு ஜெயம்ரவி மீது காதல் இருந்தாலும் அவரது அப்பாடக்கர் கேரக்டரை மாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிராமத்துக்கு திரும்புகிறார்கள்.

அஞ்சலி விளையாட்டுத்தனமான பொண்ணு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கும்னு நம்பி வருகிறவருக்கு ஷாக். அஞ்சலி காதல் இன்னும் தீவிரமாகி ரவிக்காக காத்திருக்கிறார். அஞ்சலியும், த்ரிஷாவும் சந்திக்கிறார்கள். பூகம்பம் வெடிக்கிறது, அனல் பறக்கிறது. இருவராலும் சூரி பந்தாடப்படுகிறார். இறுதியில் ஜெயம்ரவி யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் கதை.

ஜெயம்ரவி நடிக்கும் முதல் முழுநீள காமெடி படம், அஞ்சலிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் படம். திருமணம் நெருங்கும் நேரத்தில் வெளிவரும் த்ரிஷா படம். அலெக்ஸ் பாண்டியன் தோல்விக்கு பிறகு சுராஜ் வெற்றியை எதிர்பார்க்கும் படம் என படத்துக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கிறது

சினிமாவிற்கு பிறகு அரசியல்தான் - கவர்ச்சி நடிகை

சினிமாவிற்கு பிறகு அரசியல்தான் என அந்த புது கவர்ச்சி நடிகை தெரிவித்துள்ளார். சினிமாவிற்கு வந்து ஒரு வருடம் கூட பூர்த்தி ஆகாத நிலையில், இப்பொழுது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டார் அந்த நடிகை.
kavarchi nadigai

பத்திரிகை பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த அவர், எதிர்கால லட்சியம் என்ன என்ற கேள்விக்கு தடாலடியாக பதில் அளித்துள்ளார்.

சினிமாவில் தோல் சுருக்கம் விழும்வரைக்கும்தான் வாய்ப்பு கிடைக்கும். இளமை இருக்கும்போது பணம் சம்பாதித்துவிட வேண்டும்.

அதற்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அதிரடியாக பேசியுள்ளார்.

சேவை செய்கிறாரோ இல்லையோ, கடைசி வரைக்கும் லட்சம் லட்சமாக பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பது அவரது பேட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.




முன்னணி நடிகர்களுடன் நடிக்க நினைக்கும் நடிகை!

தற்பொழுது பாப்புலராகி கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகனாக மாறிய படத்தில் நடித்த நடிகை ஒருவர் , மற்ற கதாநாயகர்களுடன் ஒரு ரவுண்டு நடித்து விட வேண்டும் என் துடிப்பாக உள்ளாராம். 

sullan siva


எந்த சந்தப்ப்பத்திலும் இதுபோன்ற வாய்ப்பை நழுவ விட போவதில்லை என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறாராம் அந்த இளம் நடிகை..!



ஏற்றி விட்டவரை கழற்றிவிட நினைக்கும் நடிகர்..!

சிவமான நடிகரும், சுள்ளான் நடிகரும் ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சுள்ளான் நடிகரால்தான் சிவமான நடிகர் பெரிய ஹீரோவாக ஆனார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

சினிமாவில் சறுக்கி விழாமல் இருக்க அடிக்கடி சிவமான நடிகருக்கு சுள்ளான் நடிகர் அறிவுரை கூறுவது வழக்கமாக இருந்து வந்ததாம்.
sullan siva

ஆரம்பத்தில் இவரது அறிவுரையை கேட்டுக் கொண்டிருந்த சிவமானவர், தற்போது பெரிய நடிகராகிவிட்டதால் சுள்ளான் நடிகரின் அறிவுரையை கேட்க மறுக்கிறாராம்.

இப்போதெல்லாம் சுள்ளான் நடிகர் அவருக்கு போன் செய்தால், அந்த போனை உடனடியாக துண்டிக்கிறாராம்.

இது அவருக்கு பெரிய பிரச்சினை ஏற்படுத்திவிடும் என்று சுள்ளான் நடிகர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம்.

இந்த விஷயம் அரசல் புரசலாக சிவமான நடிகரின் காதுக்கு சென்றும், அதுபற்றி ஏதும் தெரியாதவர் போல் நடந்துகொள்கிறாராம் சிவமான நடிகர்.

அந்த நடிகையுடன் நடிக்க ஆசைபடும் நடிகர்.!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர், தற்போது இசையமைப்பதை விட நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறாராம்.

இவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் மூன்றாவதாக ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.
antha nadigai

இந்தப் படமும் வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கும் நடிகருக்கு யோகா நடிகையுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம்.

தமிழ் நடிகைகளிலேயே யோகா நடிகைதான் நடிகரை மிகவும் கவர்ந்தவராம்.

காஜல் அகர்வால் கலக்கும் ராம்லீலா!

தெலுங்கில் ராம்சரண்-காஜல் அகர்வால் நடித்து வெற்றி பெற்ற படம் ‘கோவிந்துடு அந்தரி வாடு’. இப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது. இதற்கு ‘ராம்லீலா’ என்று பெயர் வைத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இயக்கியிருப்பவர் கிருஷ்ண வம்சி.
ramgopal gajal agarwal

இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களை வைத்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

அப்பா பிரகாஷ் ராஜூக்கும், மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறார்.

இந்த குடும்ப கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ண வம்சி உருவாக்கியுள்ளார். இஃபார் இன்டர்நேஷனல் என்ற படநிறுவனம் சார்பில் ராபி மதீரா தயாரித்துள்ளார்.

ஏற்கெனவே ராம்சரண்-காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த ‘மாவீரன்’ படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தந்தது. அதுபோல், இந்த படமும் வெற்றியைத் தேடித்தரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

"மலையாள" படங்களில் நடிக்கும் சுந்தர் சி.!

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் சமீபத்திய படங்களான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘ஆம்பள’ ஆகியவை தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது.

இவர் கடைசியாக இயக்கிய ஆம்பள படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

sundar c malayalam


ஆனால் தற்போது சுந்தர்.சி இயக்குவதை சிறிது காலம் தள்ளிவைத்து விட்டு மீண்டும் நடிப்பில் களம் இறங்கவுள்ளார்.

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வெல்லிமூங்கா’. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படத்தற்கு அதிக வசூல் ஆனது.

தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை குஷ்புவின் அவனி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.

தனுஷ்க்கு போட்டியாக அனிருத் டண்டனக்கா..!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி ஊதாரி’ என்ற பாடலை எழுதியவர் ராகேஷ்.

இவர் எழுதிய அந்த பாடலை மரணகானா விஜி, தனுஷ், நவீன் மாதவன் ஆகியோர் இணைந்து பாடினர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ANIRUTH-THANUSH


இந்த பாடலுக்கு பிறகு ராகேஷுக்கு நிறைய பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் ராகேஷ்.

இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ‘டண்டனக்கா’ என்று தொடங்கும் அந்த பாடலுக்கு டி.இமான் இசையமைக்க, அனிருத் பாடி அசத்தியுள்ளார்.

டங்காமாரி’ பாடலைப் போன்று இந்த பாடலும் பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

‘ரோமியா ஜுலியட்’ படத்தை லட்சுமண் என்பவர் இயக்குகிறார். கூடிய விரைவில் படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு!

ரஜினியின் ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரூ. 33 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு அளிக்க முன் வந்தார்.
linga nasta eedu

இதையடுத்து விநியோகஸ்தர்களிடம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.25 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது.

ஆனால் லிங்கா பட விநியோகஸ்தர் தரப்பில் நஷ்டஈடு தொகையை மேலும் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து இன்று விநியோகஸ்தர்களுடன் சரத்குமாரும் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர் ராக்லைன் வெங்கடேசும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பது என்று முடிவாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரத்குமார் கூறும்போது, மனிதாபிமான அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு குறிப்பிட்ட தொகையை நஷ்டஈடாக வழங்க ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர் சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என நம்புகிறேன் என்றார். எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களிடம் இதுபோல் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் கூறும்போது, இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.

பெங்களூர் கோர்ட்டில் தயாரிப்பாளர் பெற்றுள்ள தடை உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.