அப்பாடக்கர் சினிமா கதை விமர்சனம்

SOCIALIZE IT ⇨
ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடிக்கும் படம் அப்பாடக்கர், சுராஜ் இயக்குகிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதன் இறுதிகட்ட
படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்து வருகிறது. அப்பாடக்கர் படத்தின் கதை இதுதான்...

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் சுற்றித் திரிகிறவர் ஜெயம்ரவி, அவரது நண்பர் சூரி. எந்த பிரச்னையிலும் இருந்து ஈசியாக தப்பித்து வருகிறவர்களை "அவன் பெரிய அப்பாடக்கருப்பா" என்பார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஜெயம்ரவி. உள்ளூர் பெண் அஞ்சலியை ஜாலிக்காக காதலிப்பார். அதாவது டைம் பாசுக்கு.

ஆனால் அஞ்சலியோ உண்மையாக தீவிரமாக காதலிப்பார். ரவியின் ஜாலியான காதலுக்கும், அஞ்சலியின் தீவிரமான காதலுக்கு இடையில் கிடந்து அல்லாடுவார் சூரி. அஞ்சலி துடுக்குத்தனமான வாயாடி பொண்ணு. நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார். ஒரு கட்டத்தில் அஞ்சலி தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி ரவியை மிரட்ட, தப்பித்து சென்னைக்கு வருகிறார் ஜெயம்ரவி.

சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு த்ரிஷா மீது நிஜமான காதல் வருகிறது. த்ரிஷாவுக்கு ஜெயம்ரவி மீது காதல் இருந்தாலும் அவரது அப்பாடக்கர் கேரக்டரை மாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிராமத்துக்கு திரும்புகிறார்கள்.

அஞ்சலி விளையாட்டுத்தனமான பொண்ணு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கும்னு நம்பி வருகிறவருக்கு ஷாக். அஞ்சலி காதல் இன்னும் தீவிரமாகி ரவிக்காக காத்திருக்கிறார். அஞ்சலியும், த்ரிஷாவும் சந்திக்கிறார்கள். பூகம்பம் வெடிக்கிறது, அனல் பறக்கிறது. இருவராலும் சூரி பந்தாடப்படுகிறார். இறுதியில் ஜெயம்ரவி யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் கதை.

ஜெயம்ரவி நடிக்கும் முதல் முழுநீள காமெடி படம், அஞ்சலிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் படம். திருமணம் நெருங்கும் நேரத்தில் வெளிவரும் த்ரிஷா படம். அலெக்ஸ் பாண்டியன் தோல்விக்கு பிறகு சுராஜ் வெற்றியை எதிர்பார்க்கும் படம் என படத்துக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கிறது

0 comments:

Post a Comment