அனுஷ்காவின் அந்த ரகசியம்!

SOCIALIZE IT ⇨
actress anushka
என்னுடைய வெற்றிக்கு முழுமுதற் காரணம், எனது சொந்த முயற்சி தான் என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.


பாலிவுட் திரையுலகின் பேரழகியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. ஷாரூக் கான் உடன் ரப் னே பனா தி ஜோடி படத்தின் மூலம், அனுஷ்கா சர்மா திரையுலகில் அறிமுகமானார். இன்று, அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.

நடிப்பு என்பதை தாண்டி, இவ்வார இறுதியில் வெளியாக உள்ள என்.ஹெச் 10 படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அனுஷ்கா சர்மா மாறியுள்ளார். என் ஹெச் 10 படத்தில் நடிப்பு அனுபவம் மற்றும் தயாரிப்பாளர் குறித்த அனுபவங்கள் குறித்து அனுஷ்கா சர்மா, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

தயாரி்ப்பாளர் ஆனதில் மகிழ்ச்சியா?

நிச்சயமாக.... இப்போது நான் வெறும் நடிகை மட்டுமல்ல, ஒரு படத்தின் தயாரி்ப்பாளரும் கூட. நான் எந்த நிலைக்கு சென்றாலும், எனது கடின உழைப்பை என்றைக்கும் கைவிட மாட்டேன். எனது முதல் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் என்ஹெச் 10, வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. அந்த நாளுக்காக, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். கடின உழைப்பின் பலனாக, ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.

ஏன் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டீர்கள்?

நான் எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். நான் நடித்துள்ள படங்களை நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்கு தெரியும்...படத்தில் சிறந்த கதை மட்டும் இருந்தால், நடிகர், நடிகையர் யார் நடித்தாலும் படம் வெற்றிபெறும். நான் கதைக்கு மட்டுமே எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

என்ஹெச் 10 படத்தில் சிறந்த கதை உள்ளது. இந்த காரணத்தினாலேயே, இந்த படத்தை, நானே தயாரிக்க திட்டமிட்டேன். இந்த படத்தில் என்னால் முடிந்த அளவிற்கு, நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன்.

என்ஹெச் 10 படத்தின் கதை குறித்து?

என்ஹெச் 10 , ஒரு திரில்லர் படம். சாலை பயணத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மீரா மற்றும் அர்ஜூன் என இரண்டு கேரக்டர்கள். மீரா கேரக்டரில் நானும், அர்ஜூன் கேரக்டரில், நீல் பூபாளமும் நடித்துள்ளோம். புதுமண தம்பதிகளான மீராவும், அர்ஜூனும், வார விடுமுறையை கழிப்பதற்காக, மலைவாசஸ்தலத்திற்கு, தங்களது காரில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அப்போது அவர்களது கார், தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு சம்பவத்தை அவர்கள் எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட துவங்குகிறது. இதுதான் படத்தின் கதை ஆகும்.

என்.ஹெச்.10 பெரிய பட்ஜெட் படமா?

இல்லை..இல்லை...என்.ஹெச.10 படம் சிறிய பட்ஜெட் படம் தான். இந்த படத்தில், நான் சம்பளம் வாங்காமல் மற்றும் பெறாமல் நடித்துள்ளேன். இந்த படத்தை நான் துவங்குவதற்கு முன்பே, படத்தின் செலவு மற்றும் கிடைக்கவுள்ள லாபம் குறித்து எதுவும் சிந்திக்கவில்லை.

படத்தில் சமூக கருத்து ஏதேனும் உள்ளதா?

நான் நடித்து சமீபத்தில் வெளியான பீகே படம் போன்று, இதில் சமூக கருத்துகள் ஏதும் இல்லை. ஆனால், இதில், சமூக கருத்து என்று சொல்வதைவிட, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது தான், உங்களது மனோதிடம் மற்றும் வலிமை உங்களுக்கு தெரியவரும் என்பது தான்.... இந்த படத்தை பார்த்தபிறகு, அனைவரும் இதுகுறித்து விவாதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தயாரி்ப்பாளர் என்ற விதத்தில் உங்களது அனுபவங்கள்?

நடிகை என்ற முறையில் சொல்கிறேன். நடிப்பு என்பது எளிதானது தான், ஆனால், தயாரிப்பாளர் என்பது மிகவும் கஷ்டமான செயல் ஆகும். நடிகர் என்றால், சூட்டிங் நடக்கும்போது மட்டும் ஸ்பாட்டில் இருந்தால் போதும். ஆனால், தயாரிப்பாளரின் ரோல் அப்படி அல்ல.

படம் துவங்கும் தினத்தில் இருந்து, படம் வெளியாகும் வரை, அவர் படம் தொடர்பான வேலைகளில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும். படத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு, தயாரிப்பாளரே, முக்கியமானவர் ஆவார். தயாரிப்பாளர், பல்வேறு பட்ட மனிதர்களை சந்திப்பதோடு மட்டுமல்லாது, பல முக்கிய முடிவுகளையும் அவர்தான் எடுக்கவேண்டும். அதனால்தான் சொல்கிறேன், தயாரிப்பாளர் என்பது கஷ்டமான பணி தான்....

உங்களது இன்ஸ்பிரேசன் ஆதித்யா சோப்ராவா?

ஆமாம், அது உண்மைதான். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா தான், நான் தயாரிப்பாளராக மாற இன்ஸ்பிரேசனாக இருந்தவர். ஆதித்யா சோப்ரா சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த மனிதர். அவரின் ஆதரவு எனக்கு என்றைக்கும் இருந்தது. என்னுடைய படத்தின் டிரைலரை பார்த்தவுடனே, அவர் அது தன்னுடைய படம் போல் உள்ளது என்று சொன்னது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அவருடன் இணைந்து படம் பண்ண விரும்புகிறேன்.

உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?

ரப் னே பனா டி ஜோடி படத்தில் நடிக்க துவங்கி, தற்போது இந்த துறையில் 6 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டேன். எனது நடிப்பிற்கு, ரசிகர்கள் மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே எனது நடிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.

நடிப்பிற்காக, நான் யாரையும் பாலோ பண்ணுவதில்லை. எனக்கு தெரிந்த மற்றும் என்னால் முடிந்த கதாபாத்திரங்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதையே, எனது வெற்றிக்கு காரணமாக நான் நினைப்பதாக அனுஷ்கா சர்மா கூறினார்.

0 comments:

Post a Comment