சிவகார்த்திகேயனுடன் மோதப்போகும் ஆர்யாவின் தம்பி..!

SOCIALIZE IT ⇨
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற பிப்ரவரி 27-ந் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘காக்கிசட்டை’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
hansika-aaryabrother

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். ‘காக்கிசட்டை’ வெளியாகும் பிப்ரவரி 27-ந் தேதி ‘வஜ்ரம்’, ‘மணல் நகரம்’, ‘இரவும் பகலும்’, ‘சொன்னாப் போச்சு’ போன்ற சிறு பட்ஜெட் படங்களும் வெளிவருகின்றன.

தற்போது இந்த போட்டியில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எட்டுத்திக்கும் மதயானை’ என்ற படமும் களமிறங்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 27-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை ‘ராட்டினம்’ படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ளார்.

நாயகியாக ஸ்ரீமுகி என்பவர் நடிக்கிறார். மனு ரமேசன் என்பவர் இசையமைக்கிறார். ராட்டினம் பிக்சர்ஸ் சார்பில் கே.எஸ்.தங்கசாமியும், ஸ்டுடியோ 9 நிறுவனமும் இணையும் தயாரித்துள்ளது. நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 27-ந் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் ‘காக்கிசட்டை’க்கு இணையாக போட்டியிடும் என நம்பலாம்.

0 comments:

Post a Comment